ஶ்ரீவேதாந்த தேசிக உபய வேதாந்த பாடசாலை.
முக்கிய அறிவிப்பு
உபய வேதாந்த்தம் : உபய வேதாந்த்தம் என்பது வேதங்கள் மற்றும் திவ்யப்ரபந்தங்கள். ஒன்று இன்றி மற்றொன்று முழுமை பெறுவதில்லை. இன்றைய கல்விமுறை வேத, ப்ரபந்த அத்யயநங்களின் முக்யத்வத்தை மிகவும் குறைத்துவிட்டன. இதை மனதிற் கொன்டு, சிறந்த வேத விற்பன்னரான நமது 46 ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் சிறந்த வேத விற்பன்னர். இவர் தொலைநோக்கு பார்வையுடன் ஒரு இருவழி திட்டத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொன்டுள்ளார். இதன்படி CBSE பாட திட்டத்தின்படி கல்வியும் கூடவே வேத ப்ரபந்தங்களும் கற்பிக்கப்படும். இத் திட்டம் சங்கர மடத்தால் வெற்றிகரமாக நடத்தி வரப்படுகிறது.
ஸ்ரீமதழகியசிங்கர் : திருவுள்ளப்படி ஶ்ரீ வீரராகவஸ்வாமி தேவஸ்தானம் இக்கல்வியான்டு முதலே இத்திட்டத்தைத் தொடங்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த இரட்டை கல்வி முறையின் முக்கிய ஷரத்துகள்:
தற்சமயம் பாடசாலை மாணவர்கள் CBSE பாடதிட்டத்தின்படி கல்வி பெற திருவள்ளூரில் உள்ள Sri R M Jain Higher Secondary School ல் முதல் வகுப்பிலிருந்து சேர்க்கப்படுவர். அவர்களுக்கு தங்கும் வசதி, உண்வு, உடை ,+2 வரை படிப்பு செலவு ஆகியவற்றை ஶ்ரீ வீரராகவஸ்வாமி தேவஸ்தானம் முழுவதுமாக ஏற்கும். திருவள்ளூரில் கட்டப்படும் புதிய வளாகத்தில் பாடசாலை செயல்படும்.. தன் நிர்வாகத்தின் கீழ் CBSE பாடதிட்டத்தின்படி ஒரு பள்ளியைத் தொடங்க ஏற்பாடுகள் விரைவாக செய்யப்படும். +2 முடித்த மாணவர்கள் வேதம் அல்லது ப்ரபந்தத்தில் பயிற்சியும் முழுமையாக பெற்றிருப்பர். விருப்பமுள்ளவர்கள் மேற்படிப்பும் தொடர முடியும்.
ஶ்ரீ வீரராகவன் மற்றும் ஶ்ரீ மாலோலன் இவர்கள் திருவருளால் நடக்கவிருக்கும் இத்திட்டதில் குழந்தைகளை சேர்க்க விரும்புபவர்கள் காலம் தாழ்த்தாமல் தேவஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீமதழகியசிங்கர் நியமப்படி.
C.C.Sampath,
கௌரவ ஏஜென்ட்
Cell: 9444380805